Breaking News

1.85 இலட்சம் பேர் பங்கேற்கும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு

     முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு தமிழ்நாட்டில் மொத்தம் 154 தேர்வு மையங்களில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மொத்தம் 1.85 லட்சம் பேர் எழுத உள்ளதாகவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதைப்பற்றி ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்ட அறிவிப்பில், அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை -1க்கான தேர்வு வரும் செப்டம்பர்  27 , 28 , 29ம் தேதிகளில் நடைபெறும் என அறிவித்தார்.

   தமிழகம் முழுவதும் 154 தேர்வு மையங்களில் தேர்விற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.காலை மாலை இரு வேளைகளிலும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் இத்தேர்வில் 1.85 லட்சம் தேர்வர்கள் பங்கேற்க உள்ளனர்.தேர்வுக்கான நுழைவு சீட்டை இதுவரை 1.03 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் டி.ஆர்.பி.யின் மாதிரி தேர்விற்கு   இணையதளம் வழியே முயற்சி செய்துள்ளனர்.

   ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு இத்தேர்வில் கணினி வழியில் 150 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். ஒவ்வொரு கேள்வியும் வரிசையாகவோ முன்னும் பின்னுமாகவோ பதிலளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.தேர்வர்கள் இத்தேர்வுக்கான பயிற்சியினை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இந்த பயிற்சியில்  கேட்கப்படும் வினாக்கள் அனைத்தும் தேர்வர்களின் பயிற்சிக்காகவே உருவாக்கப்பட்டவை என அதில் கூறப்பட்டுள்ளது.


No comments