கரோனா வைரஸுக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி நடைபெற்றுவருகிறது
உலகமெங்கும் ஆயிரக்கணக்கானோரைக் காவு வாங்கிவரும் கரோனா வைரஸுக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி , தற்போது பல்வேறு நாடுகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது . தடுப்பூசியைக் கண்டுபிடிக்க குறைந்தது 18 மாதங்கள் ஆகும் என்று கூறியுள்ள உலக சுகாதார நிறுவனம் , கரோனா தடுப்பூசியை விலங்குகளின் உடல்களில் செலுத்தி பரிசோதிப்பதற்கு அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து இதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன .
தடுப்பு மருந்தை மனித உடலில் செலுத்தி சோதித்தறியும் பணி , அமெரிக் காவில் மார்ச் மாதத்திலேயே நடந்தேறி விட்டது . இந்நிலையில் , ஆஸ்திரேலி யாவின் காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனத்தின் ( Commonwealth Scientific and Industrial Research Organisation - CSIRO ) ஆய் வாளர்கள் கரோனா தொற்றுக்கு ஆளாகும் வாய்ப்புள்ள ஃபெர்ரட் ( Ferret ) எனப்படும் சிறு விலங்கின் உடலில் இந்தத் தடுப்பூசியைப் போட்டு சோதனை செய்திருக்கிறார்கள் .
இதற்கிடையே , காசநோயைத் தடுக்க 100 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப் பட்ட ' பாசிலஸ் கால்மெட் - குயெரின் ' ( Bacillus Calmette - Guerin - BCG ) எனும் தடுப்பூசியை , கரோனா வைரஸுக்கு எதி ராக சோதனை செய்து பார்க்கும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டிருக்கிறார்கள் . இது , காசநோயைத் தடுப்பதைத் தாண்டியும் நோய் எதிர்ப்பாற்றல் மண்டலத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும் ஆற்றல் வாய்ந்தது என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள் .
முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர் களுக்கும் , முதியோருக்கும் இந்தத் தடுப் பூசியை செலுத்தி சோதனை நடை பெற்று வருகிறது . எனினும் , இந்தத் தடுப் பூசி வகைகள் பெரும்பாலும் குழந்தை களுக்கானவை என்பதால் , இவற்றை பெரியவர்கள் பயன்படுத்தத் தொடங்கி னால் பெரிய அளவில் பற்றாக்குறை ஏற்பட்டுவிடும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்திருக்கிறார்கள் .அரசியல் விளையாட்டுகள் இந்தச் சூழலில் , கரோனா வைரஸுக் கான தடுப்பூசியைத் தயாரிப்பதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிக ஆர்வம் காட்டுகிறார் . தடுப்பூசிக்கான காப்புரிமை அமெரிக்காவிடம் இருந்தால் , உலகம் முழுவதற்குமான அதன் விநியோகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க முடியும் என அவர் நம்புகிறார் .
கரோனா வைரஸுக்கான தடுப் பூசியைத் தயாரிப்பதில் முக்கிய கட்டங்களை எட்டிவிட்டதாக சொல்லப்படும் ' க்யூர்வேக் ' ( CureVac ) எனும் ஜெர்மனி நிறுவனத்தை வாங்கிக்கொள்ள அல்லது தடுப்பூசிக்கான உரிமத்தை வாங்கிக் கொள்ள ட்ரம்ப் தரப்பிலிருந்து முயற்சி கள் மேற்கொள்ளப்பட்டதாக வெளியான செய்திகள் , இதில் இருக்கும் அரசியலை வெளிச்சம் போட்டுக் காட்டின . மறுபுறம் , மற்றொரு ஜெர்மன் நிறுவனமான ‘ பயோஎன்டெக் ' ( EiaNTech ) நிறுவனத்தின் பங்குகளை வாங்க ஒரு சீன நிறுவனம் முயன்ற செய்திகள் , இதில் நிலவும் கடும் போட்டியை வெளிச்சம் போட்டுக் காட்டின
உலக விஞ்ஞானிகள் ஆய்வு கரோனா வைரஸின் மரபணு வரிசை தொடர்பான தகவல்களை உலக நாடு களுடன் சீனா பகிர்ந்து கொண்ட பிறகு , மனித உடலில் இந்த வைரஸ் எப்படி நுழைகிறது , எப்படி நோய்த் தாக்குதலை ஏற்படுத்துகிறது என்றெல் லாம் உலக விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள் . தற்போது , உலக நாடுகள் தங்கள் எல்லையை மூடிக்கொண்டாலும், உலகமெங்கும் உள்ள விஞ்ஞானிகள் தங்களுக்கிடையே வலைப்பின்னலை ஏற்படுத்திக்கொண்டு கரோனா வைர ஸுக்கு எதிரான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருப்பது நம்பிக்கை தருகிறது .
No comments