ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் தன்னார்வலராக தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் - CEO அறிவுறுத்தல்
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை சார்ந்த அனைத்து அரசு/ நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/ ஆசிரியர்களுக்கு, கொரோனா தடுப்பாக மக்களுக்கு உதவும் வகையில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் தன்னார்வலராக தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.
காவல்துறையினர் தங்களை தொடர்புகொள்ளும்போது மாவட்ட நிர்வாகத்தால் அளிக்கப்படும் பணியினை எவ்வித பிரதிபலனுமின்றி முற்றிலும் சேவை மனப்பான்மையுடன் மேற்கொள்ளும்படி தெரிவித்தல். பொது மக்களிடையே சமூக இடைவெளி ஏற்படுத்த மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற மிகச் சிறந்த சேவை வாய்ப்பினை மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ளது.
காவல்துறையினர் தங்களை தொடர்புகொள்ளும்போது மாவட்ட நிர்வாகத்தால் அளிக்கப்படும் பணியினை எவ்வித பிரதிபலனுமின்றி முற்றிலும் சேவை மனப்பான்மையுடன் மேற்கொள்ளும்படி தன்னார்வமுள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தங்கள் ஆளறி அட்டை (ID CARD) காவல்துறையால் வழங்கப்படும்.
மேலும், COVID-19 சார்பாக அரசால் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றிடவும். தங்களுக்கு மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்படும் அறிவுரைகளை பின்பற்றி சிறப்பாக செயல்படும்படி தன்னார்வமுள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
மாவட்டவாரியாக தன்னார்வலர் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.
No comments