திருநெல்வேலியில் ஒருவருக்கு கொரோனா உறுதி
திருநெல்வேலியில் ஒருவருக்கு கொரோனா உறுதி
துபாயிலிருந்து விமானத்தில் மதுரை வந்த திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தைச் சேர்ந்த இளைஞருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனை யில் உறுதியாகி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் ராதா புரம் வட்டம் சமூககிரங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞர் கடந்த மார்ச் 17 - ம் தேதி துபாயில் இருந்து விமானத்தில் மதுரை வந்தார் .
மதுரையிலேயே உடல்நலக் குறைவு இருந்துள்ளது . ஆனால் , மதுரையில் அவர் பரி சோதனைக்கு உட்படுத்தப்பட்டாரா என தெரியவில்லை. அங்கிருந்து , சொந்த ஊருக்கு வந்த அந்த இளைஞர் , வள்ளியூர் , கள்ளிகுளம் பகுதிகளில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார் .
திருநெல்வேலி பெருமாள்புரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கும் வந்து தங்கியுள்ளார் . காய்ச்சல் அதிகமாகவே , திரு நெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார் . காய்ச்சலின் தாக்கம் அதிகரித்ததால் , நேற்று முன்தினம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார் . அவரது ரத்த மாதிரியை பரிசோதித்ததில் அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
No comments