கொரோனா பாதிப்பு - அரசு ஊழியர் ஆசிரியர் ஒருநாள் ஊதியம் வழங்க முடிவு
கொரோனா பாதிப்பு - அரசு ஊழியர் ஆசிரியர் ஒருநாள் ஊதியம் வழங்க முடிவு
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யில் பாதிக்கப்படும் ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகை யில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்குவதாக என்ஜிஓ சங்கம் அறிவித்துள்ளது .
முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது : கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை காப்பாற்றும் வகையில் தமிழக அரசின் பொது சுகாதாரத் துறை , உள்ளாட்சித் துறை, நகராட்சி மற்றும் நிர்வாகத் துறை, காவல்துறை, போக்குவரத் துத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பணியாளர் கள் மிகுந்த அக்கறையோடு பணியாற்றி வருகிறார்கள் என்பதை தங்களின் மேலான பார்வைக்கு கொண்டு வருகிறோம் .
இந்த கடினமான சூழ்நிலையில் , கொரோனா தொற்றிலிருந்து தமிழக மக்களை பாதுகாக்க எடுக்கப்படும் அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும் , அமைப்புசாரா தொழிலாளர்கள் , தினக்கூலி பணியாளர்கள் , ஏழை எளிய மக்கள் ஆகியோருக்கு உதவும் வகையிலும் தமிழக அர சில்பணிபுரியும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் ஒருநாள் ஊதியத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க இசைவு தெரிவித்துக் கொள் கிறோம் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது .
No comments