Breaking News

குழந்தைகள் தினம் கொண்டாட பின்னணியும் அதற்கான காரணமும் என்ன

       ஐ.நா-வின் யுனிசெஃப் உலகம் முழுவதும் நவம்பர் 20 ம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் என்று அறிவித்த நிலையில் இந்தியாவில் மட்டும் நவம்பர் 14 ல் கொண்டாடப்படுகிறது.இந்தியாவின் முதல் பிரதமரான பண்டித ஜவகர்லால் நேரு 1889 நவம்பர் 14-ந் தேதி அலகாபாத்தில் பிறந்தார். அவர் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டுவருகிறது. அன்றைய தினம் பள்ளிகளில் மாணவர்களுக்கிடையே பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி முதலான பல போட்டிகள் நடத்தப்படுகின்றன.  'ரோஜாவின் ராஜா' என்று அழைக்கப்பட்ட நேரு குழந்தைகளிடம் அளவுகடந்த அதிக அன்பு கொண்டவர். பல பள்ளிகளில் காணப்படும் படங்களில் சட்டைப்பையில் ஒரு ரோஜாவுடன் சிரித்த முகத்துடன் அவரது புகைப்படம் காணப்படும். மேலும் அவரை குழந்தைகள் செல்லமாக நேரு மாமா என்று அழைப்பது உண்டு. 


No comments