இனி பட்டப்படிப்பு மாணவர்களை போன்று பள்ளி மாணவர்களுக்கும் தொழிற்சாலை பார்வை Industrial Visit
மேல்நிலை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இதுவரை மொத்தம் 45 லட்சத்து 72 ஆயிரம் விலையில்லா மடிகணினிகள் வழங்கப்பட்டுள்ளது. 2017-18 மாணவர்களுக்கு விரைவில் மடிக்கணினி வழங்கப்படும். சிபிஎஸ்இ பாடத்திட்டங்களை விட தமிழ்நாட்டின் பாடத்திட்டங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. காலத்தைப் பற்றி கவலையில்லை. மாணவ, மாணவிகளை சிறந்த கல்வியாளராக மாற்ற வேண்டும் என்பதே நோக்கமாக கொண்டு இந்த அரசு செயல்பட்டு வருகிறது.மாணவர்கள் ஆங்கிலம் கற்பதற்கு எதுவாக 1,000 ஆங்கில வார்த்தைகள் கொண்ட சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது. இது விரைவில் வெளியிடப்படும் மற்றும் . தொழிற்சாலைகளுக்கு மாணவ, மாணவிகளை அழைத்து சென்று பயிற்சி அளிக்க ஏற்பாடு முடிவு செய்யப்பட்டுள்ளது. 7 ஆயிரத்து 500 அரசு பள்ளிகளில் இண்டர்நெட், கம்ப்யூட்டர் வசதியடன் கூடிய ஸ்மார்ட் கிளாஸ் துவங்கப்படும். அரசு பள்ளிகளில் கரும்பலகைக்கு பதிலாக 90 ஆயிரம் ஸ்மார்ட் போர்டுகள் கொண்டு வரப்படும். ஏற்கனவே பல பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டு கொண்டு வரப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அரசு பள்ளிகளை உருவாக்குவோம் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
No comments