Breaking News

TNPSC குரூப் 2 முதல்நிலைத் தேர்வில் மொழித்தாள் நீக்கம்

              டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலைத் தேர்வில் மொழித்தாள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால் தேர்வர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசுப் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) பல்வேறு நிலைகளில் தேர்வுகளை நடத்துகிறது. அதில், சார் பதிவாளர், வருவாய்த் துறை உதவியாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு குரூப் 2 தேர்வு நடத்தப்படுகிறது.
            இந்தாண்டு முதல் நடைபெற உள்ள குரூப் 2 தேர்வு முறையில் சில மாற்றங்களை செய்துள்ளது. எனவே டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல் நிலைத் தேர்வில் மொழித்தாள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) அறிவித்துள்ளது இதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ளது. முதல்நிலைத் தேர்வில் மொழித்தாளில் கேட்கப்படும் கேள்விகளுக்கும் பதிலாக பொதுஅறிவு வினாக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.


Click here to view New Syllabus


No comments