LKG, UKG பள்ளி முன்பருவக் கல்வித் திட்டத்திற்கான கலைத்திட்டம் (Syllabus)
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பள்ளி முன்பருவக் கல்வித் திட்டம் நாடு முழுவதும் ஒரே அமைப்பாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. அதனடிப்படையில் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுமம் பள்ளி முன்பருவக் கல்விக்கான கலைத்திட்டத்தினை வடிவமைத்து, அதனடிப்படையில் Pre KG, LKG மற்றும் UKGக்கான பாடத்திட்டத்தை வடிவமைத்துள்ளது. இதனடிப்படையில் மாண்புமிகு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களும், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் அவர்களும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு பள்ளி முன்பருவக் கல்விக்கான பாடத்திட்டத்தை தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தயாரித்துள்ளது. இப்பாடத்திட்டம் www.tnscert.org என்ற இணையத்தளத்தில் வெளிடப்பட்டுள்ளது. வல்லுநர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இப்பாடத்திட்டத்தினைப் பார்வையிட்டு தங்களது கருத்துக்களை 30.10.2018க்குள் கடிதம் வழியாகவோ அல்லது awpb2018@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாகவோ தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.கீழே உள்ள லிங்க்-ஐ கிளிக் செய்வதன் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்
No comments