Breaking News

செப்டம்பர் 30ம் தேதி வரை மட்டுமே மாணவர் சேர்க்கை

    வரும், 30ம் தேதி வரை மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என  அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில், ஒவ்வொரு ஆண்டிலும், ஏப்ரலில் மதம் முதல் மாணவர் சேர்க்கை நடக்கும்.  அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடத்தப்படும். ஆனால், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதால், மாணவர் சேர்க்கையை மேலும், ஒரு மாதம் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டு, செப்டம்பர் வரை மாணவர்களை சேர்த்து கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த சலுகை, வரும், 30ம் தேதியுடன் முடிகிறது. அதன்பின், காலாண்டு விடுமுறைக்கு பின் புதிய மாணவர்களின் சேர்க்கையை நிறுத்திக் கொள்ள, பள்ளி தலைமை ஆசிரியர்களை, கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.


No comments