Breaking News

கொரோனா பரவலால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பொதுத்தேர்வின் போது விருப்பத்தின் அடிப்படையில் வீட்டுக்கு அனுப்பப்படுவர்

  பொதுத்தேர்வு எழுத வரும் மாணவர்களுக்குக் காய்ச்சல் இருப்பது தெரியவந்தால் விருப்பத்தின் அடிப்படையில் வீட்டுக்கு அனுப்பப்படுவர் எனப் பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளது



   தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு நடைபெற்று வந்த பொதுத் தேர்வுகள்கொரோனா பரவலால்  தடைப்பட்டது. இந்நிலையில், வரும் 11-ஆம் தேதி 11-ஆம் வகுப்புக்கு நிலுவையில் உள்ள தேர்வும், 18 ஆம் தேதி 12-ஆம் வகுப்புத் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறு தேர்வும் நடைபெற உள்ளது. இதனிடையே, வரும் 15-ஆம் தேதி 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்க உள்ளது



   இந்நிலையில் பொதுத்தேர்வு எழுத வரும் மாணவர்களுக்குக் காய்ச்சல் இருப்பது தெரியவந்தால் விருப்பத்தின் அடிப்படையில் வீட்டுக்கு அனுப்பப்படுவர் எனப் பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளது. மேலும், வீட்டிற்கு அனுப்பப்படும் மாணவர்கள் துணைத் தேர்வுகளை எழுதிக் கொள்ளலாம். காய்ச்சல் இருந்தாலும் மாணவர்கள் விரும்பினால் தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments