கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், இலவச மாணவர் சேர்க்கை ஊரடங்கு காரணமாக தள்ளிவைப்பு
கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், இலவச மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு, ஊரடங்கு காரண மாக தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசின் கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமை சட்டப்படி, தமிழகத்தில் அனைத்து தனியார் பள்ளிகளிலும் நுழைவு வகுப்புகளில், 25 சதவீத இடங்களில், இலவச மாணவர் சேர்க்கைவழங்கப்படுகிறது.எல்.கே.ஜி., உள்ள பள்ளிகளில், எல்.கே.ஜி.,க்கும்; மற்ற பள்ளி களில், ஒன்றாம் வகுப்புக்கும், அரசின் வழியே மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.இந்த சேர்க்கையில் அனுமதி பெறும் மாணவர்கள், எட்டாம் வகுப்பு வரை கல்வி கட்டணம் செலுத்த வேண்டாம். அவர்களுக்கான கட்டணத்தை, மத்திய - மாநில அரசுகள் வழங்கும்.இந்த மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு, ஒவ்வொரு ஆண்டும்,ஏப்ரல், 2ல் வெளியிடப்படும்.
தற்போது, ஊரடங்கு அமலில் உள்ளதால், நேற்று வெளியாகவிருந்த மாணவர் சேர்க்கை அறிவிப்பு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு முடிந்த பின், புதிய தேதி அறிவிக்கப்படும் என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர், கருப்பசாமி அறிவித்துள்ளார்.
No comments