உலகில் கரோனா தொற்றால் நுழைய முடியாத ஒரு நாடு உள்ளது அது எந்த நாடு ?
உலக நாடுகளை உலுக்கியிருக்கும் கரோனா தொற்று நுழையாத ஒரு நாடு உண்டு என்றால் அது வட கொரியா என்று அறியப்படுகிறது. வட கொரியாவில் தற்போது கரோனா அறிகுறி மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என சுமார் 500 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த வாரத் துவக்கத்தில் இது 2,280 ஆக இருந்த நிலையில், தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு கரோனா அறிகுறி தென்படவில்லை என்று பலரும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், வடகொரியாவில் இதுவரை ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என்றும், எனினும், தொற்று ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
கரோனா பரவல் தீவிரமாகும் முன்பே எல்லைகளை மூடி, வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, வெளிநாட்டினர் உடனடியாக அவர்களது சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பி வைத்து, பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, வட கொரியாவில் இதுவரை யாருக்கும் கரோனா பாதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், தனிமைப்படுத்தப்படுதல் நடவடிக்கை மிகவும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால், இந்த தகவலில் பல உலக நாடுகளுக்கும் சந்தேகம் இருந்தாலும், கரோனா பரவத் தொடங்கியதுமே அதாவது ஜனவரி முதல் வாரத்திலேயே, வட கொரியா தனது எல்லைகளை மூடியதோடு, கரோனாவின் பிறப்பிடமான சீனாவிடம் இருந்து அனைத்து வணிகத் தொடர்புகளையும் ஒட்டுமொத்தமாக நிறுத்தி விட்டது குறிப்பிடத்தக்கது.
No comments