இரவு 9 மணி முதல் 9.09 வரை இந்தியா எப்படி இருந்தது என்பது குறித்த சாட்டிலைட் புகைப்படம், இணையத்தில் வைரல்
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்றிரவு 9 மணிக்கு இந்தியாவில் உள்ள அனைவரும் மின் விளக்கை அணைத்துவிட்டு, அகல் விளக்கை ஏற்றும்படி கோரிக்கை விடுத்தார். பிரதமரின் கோரிக்கையை ஏற்று நாடு முழுவதும் கோடிக்கணக்கானோர் மின் விளக்கை அணைத்து அகல் விளக்கை ஏற்றினர்.
இந்த நிலையில் இரவு 9 மணி முதல் 9.09 வரை இந்தியா எப்படி இருந்தது என்பது குறித்த சாட்டிலைட் புகைப்படம் தற்போது வெளிவந்துள்ளது. இதில் துரதிஷ்டவசமாக தமிழகம் எப்படி இருந்தது என்பதை பார்க்க முடியாதவாறு மேகங்கள் மறைத்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
No comments