Flash News : விடைத்தாள் திருத்தும் பணிகள் ஒத்திவைப்பு - தேர்வுத்துறை
Flash News : விடைத்தாள் திருத்தும் பணிகள் ஒத்திவைப்பு - தேர்வுத்துறை
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்தொற்றினை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான பார்வை - 1ல் கண்டுள்ள அரசாணைக்கிணங்க அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் ஏற்கனவே 31.03.2020 அன்று தொடங்க திட்டமிடப்பட்டிருந்த மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வுகள் தொடர்பான விடைத்தாட்கள் மைய மதிப்பீட்டுப் பணிகளும் , மண்டல முகாம் சார்ந்த பணிகளும் ஒத்திவைக்கப்படுகின்றன . இம்மதிப்பீட்டு பணிகள் 07.04.2020 அன்று தொடங்கப்படும் .
இது குறித்த விரிவான விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் . விடைத்தாள் சேகரிப்பு மையம் மற்றும் மண்டல விடைத்தாள் சேகரிப்பு மையம் ஆகியவற்றில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு பணியில் இருப்பதையும் , விடைத்தாட்கள் பாதுகாப்பினையும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்துகொள்ளவேண்டும் .
No comments