கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவுமா? - உலக சுகாதார அமைப்பின் பதில் இதோ
கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவுமா? - உலக சுகாதார அமைப்பின் பதில் இதோ
கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் தற்போது வரை 30,000-த்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மட்டும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 979 ஆக அதிகரித்துள்ளது. இதில் 87 பேர் குணமாகி உள்ளனர், 25 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவாது என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர் தும்மினாலோ, இருமினாலோ அல்லது பேசினாலோ ஒரு மீட்டர் தொலைவில் இருந்தால் மட்டுமே வைரஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.
மேலும் உங்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்றால் மற்றவர்களிடம் இருந்து குறைந்தபட்சம் 1 மீட்டர் தொலைவிலாவது விலகி இருங்கள். சீரான இடைவேளையில் கைகளை கழுவுங்கள் என்று தெரிவித்துள்ளது.
Post Comment
No comments