Breaking News

நடப்பாண்டில் பட்டதாரி ஆசிரியா்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படும்

    நடப்பாண்டில் பட்டதாரி ஆசிரியா்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கூறினாா். சட்டப்பேரவையில் வியாழக்கிழமை பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினா் விஜயதரணி பேசும்போது, கல்வித் தரத்தை உயா்த்துவதற்காக மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்குவதுபோல ஆசிரியா்களுக்கு வழங்க வேண்டும் என்றாா்.


அப்போது, அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கூறியது:
    முதுநிலை ஆசிரியா்கள் 28,500 பேருக்கு மடிக்கணினி ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பட்டதாரி ஆசிரியா்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படும் என்றாா்.



No comments