Breaking News

மாணவர்சேர்க்கையை உயர்த்தும் ஆசிரியர்களுக்கு ' வெரிகுட் ' விருது

மாணவர்சேர்க்கையை உயர்த்தும் ஆசிரியர்களுக்கு ' வெரிகுட் ' விருது


   அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க பாடுபடும் ஆசிரியர்களுக்கு, விருது வழங்கி கவுரவிக்கும் புதிய திட்டத்தை, மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்தவுள்ளது. அரசுப்பள்ளிகளில் சேர்க்கை சரிந்து வரும் நிலையில், மாணவர் சேர்க்கைக்கான தீவிர விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.


     கோடை விடுமுறையில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட பொருட்கள், கற்பித்தல் முறைகள், பள்ளிகளில் உள்ள கற்றல் வசதிகளை எடுத்துக்கூறி, கடந்தாண்டை விட, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் முயற்சி எடுத்தால், சேர்க்கையை அதிகரிக்க முடியும் என்பதால், சேர்க்கை தொடர்பான பணிகளில், அவர்களை ஆர்வமுடன் ஈடுபடுத்தும் வகையில், அவர்களுக்கு விருது வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

No comments