கொரோனா நிவாரணநிதி வழங்க வங்கி கணக்கு எண் அறிவிப்பு
கொரோனா நிவாரணநிதி வழங்க வங்கி கணக்கு எண் அறிவிப்பு
மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் குடிமக்கள் , நிறுவனங்கள் , அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்கள் , கோவிட் - 19 தொற்றினை எதிர்கொண்டு சமாளிப்பதற்கான பணிகளைக் கருத்தில் கொண்டும் , ஏழை எளிய மக்கள் எதிர்கொண்டுள்ள இப்பெரிய இன்னலில் இருந்து அவர்களை விடுவிக்கவும் , தீவிரமான நோய்த் தடுப்பிற்காகவும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு மனம் உவந்து தங்கள் பங்களிப்பினை அளிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அத்தகைய நன்கொடைகளுக்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80 ( G ) ன் கீழ் 100 சதவிகித வரிவிலக்கு உண்டு . வெளிநாடு வாழ் இந்தியர்கள் ( NRIS ) அல்லது வெளிநாட்டு மக்களிடமிருந்து பெறப்படும் நிவாரணத்திற்கு அயல் நாட்டு பங்களிப்பு ( ஒழுங்காற்று ) சட்டம் 2010 , பிரிவு 50ன் கீழ் விலக்களிக்கப்படும் ( இந்திய உள்துறை அமைச்சக ஆணை எண் . F . No . II / 21022 / 94 ( 1124 ) / 2015 FCRA - III , நாள் 22 . 12 . 2015 . ) நன்கொடைகளை மின்னணு மூலம் முன்னுரிமைப்படி பின்வருமாறு வழங்கலாம் .Electronic clearing System ( ECS ) மூலமாக கீழ்க்காணும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு நேரடியாக அனுப்பலாம் .
வங்கி பெயர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை தலைமைச் செயலகம் ,
சென்னை - 600 009
சேமிப்புக் கணக்கு எண் 117201000000070
IFS Code IOBA0001172
CMPRF PAN AAAGC0038F
No comments