துருப்பிடித்த 103 விலையில்லா மிதிவண்டிகளுக்கான தொகையினை உரிய அரசு கணக்கில் செலுத்த தலைமையாசிரியருக்கு உத்தரவு
துருப்பிடித்த 103 விலையில்லா மிதிவண்டிகளுக்கான தொகையினை உரிய அரசு கணக்கில் செலுத்த தலைமையாசிரியருக்கு உத்தரவு
புனித மரிய கோரட்டி மேல்நிலைப் பள்ளியில் 2018 - 2019 ஆம் கல்வியாண்டில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக பெறப்பட்ட விலையில்லா மிதிவண்டிகளில் மீதமுள்ள 103 மிதிவண்டிகள் துருப்பிடித்து மாணவர்களுக்கு வழங்க இயலாத நிலையில் உள்ளதாகவும் அதை மாணவர்களுக்கு வழங்ககூடாது எனவும் பார்வை 1 ன் படி புகார் மனு பெறப்பட்டுள்ளது .
2018 - 2019 ம் கல்வியாண்டில் 103 பெண்கள் மிதிவண்டிகள் மிதியிருந்த போது 2019 - 2020 - ம் கல்வியாண்டில் மாணவ , மாணவிகளின் முழு எண்ணிக்கைக்கும் ( Boys - 275 . Girls - 108 ) விலையில்லா மிதிவண்டிகள் , கோரப்பட்டதற்கான தன்னிலை விளக்கத்தினை இக்கடிதம் கிடைக்கப்பெற்ற இரு தினங்களுக்குள் நேரில் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்கும் படி பார்வை 2 - ன் படி பள்ளித் தலைமையாசிரியருக்கு தெரிவித்திருந்தும் இதுவரை தன்னிலை விளக்கம் பெறப்படவில்லை .
எனவே பார்வை 1 ன் படியான குற்றச்சாட்டு நிருபணமாகியுள்ள நிலையில் 2019 - 2020 ம் கல்வியாண்டில் மாணவ / மாணவியர்களுக்கு வழங்குவதற்காக பெறப்பட்ட விலையில்லா மிதிவண்டிகளை மாணவர்களுக்கு வழங்கிவிட்டு , 2018 - 2019 ம் கல்வியாண்டில் மீதமுள்ள 103 விலையில்லா மிதிவண்டிகளுக்கான தொகையினை உரிய அரசு கணக்கில் செலுத்தி அதற்கான செலுத்து சீட்டு இரு தினங்களில் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்கும் படி பள்ளித் தலைமையாசிரியர் கேட்டுக் கொள்ளப்படுகிறார் தவறும் பட்சத்தில் தங்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments