Breaking News

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ₹ 1000 முதல்வரின் அறிவிப்புகள் என்னென்ன

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ₹ 1000...! முதல்வரின் அறிவிப்புகள் என்னென்ன

தமிழக சட்டப்பேரவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார். அவை பின்வருமாறு:-

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ரூ. 1000 வழங்கப்படும். இந்த தொகையை பெற விருப்பம் இல்லாதவர்கள் பொதுவிநியோகத்துறை இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

நடைபாதை வியாபாரிகள் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படும் சூழல் உள்ள நிலையில் 3, 250 கோடி ஒதுக்கீடு

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான அரிசி பருப்பு பொருட்கள் விலை இன்றி வழங்கப்படும்.


கட்டட தொழிலாளர்களுக்கு சிறப்பு தொகுப்பாக ஆயிரம் ரூபாய், ஆட்டோ தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும்,

பிற மாநிலத்தை சேர்ந்த அமைப்பு சாரா தொழிலாளர்களின் குடும்பத்திற்கு 15 கிலோ அரிசி மற்றும் பருப்பு, எண்ணெய் வழங்கப்படும்.

அம்மா உணவகங்கள் தொடர்ந்து இயங்கும்; இருக்கும் இடத்தை விட்டு நகர முடியாதவர்களுக்காக இருக்கும் இடத்திலேயே சென்று சூடான சுவையான உணவு வழங்கப்படும். சமையல் பொதுக் கூடங்கள் அமைக்கப்படும்.

நடைபாதை வியாபாரிகளுக்கு கூடுதலாக 1000 ரூபாய் வழங்கப்படும். 100 நாட்கள் வேலைத் திட்டத்தில் பணியாற்றுவபர்களுக்கு இரண்டு நாள் ஊதியம் கூடுதலாக ஊதியம் வழங்கப்படும்.


நியாயவிலை கடைகளில் மார்ச் மாத பொருட்களை வாங்க தவறி இருந்தால் அதனை ஏப்ரல் மாதத்தில் சேர்த்து பெற்றுக் கொள்ளலாம்.

தேவையான இடங்கள் அனைத்திலும் சமையல் கூடம் அமைக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவு. அங்கன்வாடி மையங்களில் உணவருந்தும் முதியவர்களுக்கு உணவு வழங்க நடவடிக்கை.

பதிவு செய்யப்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஆயிரம் ரூபாயுடன், கூடுதலாக 1000 ரூபாய் வழங்கப்படும்.

No comments