IFHRMS செயல்படுத்துதல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
அரசின் திட்டமான ஒருங்கிணைந்த நிதி ( ம ) மனிதவள மேம்பாடு அமைப்பு முறை , 2020 ஆம் ஆண்டு சனவரி மாதம் முதல் கருர் மாவட்டத்தில் தனிய அமைப்பு முறையாகச் செயல்படத் தொடங்கியுள்ளது .
இத்திட்டம் தொடர்பான பயிற்சி திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் 28 . 05 . 2018 முதல் அனைத்து பணம் பெறும் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு , அவர்களின் சந்தேகங்களுக்கும் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது . மேலும் மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களால் சட்டசபையில் அறிவிக்கப்பட்டு , ஆணையர் , கருவூலக்கனக்குத்துறை , சென்னை அவர்களின் அறிவுரையின்படி , இத்திட்டம் 01 . 03 . 2020 முதல் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட அறிவிக்கப்பட்டுள்ளது .
25 . 02 . 2020 முதல் ATBPS என்கிற பழைய முறையில் பட்டியல் வில்லை ( டோக்கன் வழங்குவது நிறுத்தப்படும் என்கிற விபரம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அனைத்துப் பணம் பெறும் அலுவலர்களுக்கும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது .
மேலும் 01 . 03 . 2020 முதல் IFHRMS முறையில் அனைத்துப் பணம் பெறும் அலுவலர்களும் தங்கள் பட்டியல்களைத் தயார் செய்து , சம்பந்தப்பட்ட கருவூலத்திற்கு அனுப்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மாவட்ட ஆட்சியர், திருநெல்வேலி.
No comments