Breaking News

பொதுத்தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான சரிபார்ப்பு பட்டியல் Checklist வெளியீடு

1.அனைத்து பள்ளிகளின் அறிவிப்பு பலகைகளிலும் , சம்பந்தப்பட்ட வகுப்பறைகளிலும் , வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களிலும் | தேர்வுக்கால அட்டவணைகள் ஒட்டப்பட வேண்டும் .

2. அனைத்துத் தேர்வு மையங்களுக்கும் முதன்மை விடைத்தாள் கூடுதல் விடைத்தாள் / வரைகட்டத்தாள் வழங்கப்பட்டுள்ளது , பிற்சேர்க்கை 7 - ன் படி தைத்திருக்க வேண்டும் .



3. அனைத்துத் தேர்வு மையங்களுக்கும் முகப்புத்தாள் கட்டுகள் வழங்கப்பட்டுள்ளது . முதன்மை விடைத்தாள்களுடன் முகப்புத்தாட்கள் தைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்யப்பட வேண்டும் .

4. தேர்வு மையங்களுக்கு காவலர் பாதுகாப்பிற்கு அருகில் உள்ள காவல் நிலையத்தில் கடிதம் அளிக்கப்பட்டு , காவலர் வருவதை உறுதி செய்து கொள்ள வேண்டும் .

5. வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களுக்கு ஆயுதம் தாங்கிய காவல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதையும் மற்றும் வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும் .



6. செய்முறைத் தேர்வு நடத்தி முடித்து மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யப்பட்ட வேண்டும் . ( பிப்ரவரி இறுதி வாரம் முதல் )

7. மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் அனைவரது அகமதிப்பீட்டு மதிப்பெண்களும் பதிவேற்றம் செய்யப்பட்டதை உறுதி செய்து கொள்ள வேண்டும் .



8. 10 ஆம் வகுப்பு மொழிப்பாடம் ( Language ) மற்றும் ஆங்கிலப் | ( English ) பாடங்களில் ஒரே தாளாக தேர்வுகள் நடத்தப்படும் ( 100 | மதிப்பெண்கள் ) என்பதை மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

9. மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகளுக்கான தேர்வு நேரம் 2 1 / 2 மணி நேரத்திலிருந்து 3 மணி | நேரமாக அதிகரிக்கப்படுகிறது என்பதை மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

10. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கான தேர்வு நேரம் 2 12 மணி ) | நேரத்திலிருந்து 3 மணி நேரமாக அதிகரிக்கப்படுகிறது என்பதை மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.



11. + 2 - Old syllabus writing for 70 / 90 and conversion . Bits , Copying , Misbehaving , Writing anything on the Question Paper , Writing names , Register Nos . on the answer book should be avoided .


No comments