Breaking News

பத்தாம் வகுப்பு செய்முறைத்தேர்வு தேதி அறிவிப்பு

    10 - ம் வகுப்பு செய்முறை தேர்வுக்கான தேதி அறிவிப்பு சென்னை அரசு தேர்வுத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தத்கால் உட்பட) ஹால்டிக்கெட்களை பிப்ரவரி 25 - ம் தேதி முதல்


என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 10 - ம் வகுப்புக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வு , பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே பிப்ரவரி 26 முதல் 28 - ம் தேதி வரை நடைபெறும். 

   இதையடுத்து அனைத்து வகை தனித்தேர்வர்களும் அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் தவறாமல் பங்கேற்க வேண்டும் . செய்முறைத் தேர்வு நடைபெறும் மையம் , தேதி விவரங்களை சம்மந்தப்பட்ட பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் மாவட்டக் கல்வி அதிகாரியை அணுகி அறிந்து கொள்ள வேண்டும் .

      அதேநேரம் ஹால்டிக்கெட் இல்லாமல் எந்த ஒரு தேர் வரும் தேர்வெழுத அனுமதி வழங்கப் படாது . எனவே , தனித்தேர்வர்கள் விரை வாக தங்கள் ஹால்டிக்கெட்களை பதிவி றக்கம் செய்து கொள்ள வேண்டும் . பொதுத் தேர்வு கால அட்டவணையை இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம்.


No comments