Breaking News

ATSL 2020 முதன்மைத்தேர்வு இன்று முதல் நடைபெற உள்ளது - ஆசிரியர்கள் கவனத்திற்கு

ATSL -  2020 முதன்மைத் தேர்வு

உங்கள் கவனத்திற்கு

1. ATSL 2020  முதன்மைத்தேர்வு பிப்ரவரி 20,21,22 மற்றும் 24 ஆகிய நாட்களில் மேல் நிலை பள்ளியில் உள்ள 9 - ம் வகுப்பு  மாணவர்களுக்கு  மட்டும் நடைபெறவுள்ளது. இந்த   தேர்வு ஒரு நாளில் 2 session ஆக நடைபெறும்.

2. முற்பகல்  Session காலை 9.00 மணி முதல் 1 .00 மணி வரை.  பிற்பகல் Session பிற்பகல் 2.00 மணி முதல் 6.00 மணி வரை.

3. ஒரு Session க்கு   (4 மணி நேரம்) ஒரு வினாத்தாள் live ஆக இருக்கும்.

4. மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பிரத்யேக Username மற்றும் Password ஐப்  பயன்படுத்தி login செய்ய வேண்டும்.

5. http://exams.tnschools.gov.in இணையதளத்தில் உள்நுழைந்தவுடன் மாணவர்களின் EMIS ID-ஐ Login ID ஆகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு  Password மாணவர்களின் EMIS ID-ல் கடைசி நான்கு இலக்கம் @ மாணவரின் பிறந்த ஆண்டினை கொடுத்து உள் நுழைய வேண்டும்.

6. உதாரணமாக – ஒரு மாணவரின் EMIS ID 3390XXXX0400018 எனில், அந்த EMIS ID தான் இந்த தேர்விற்கான Login ID, அதில் இறுதியாகவுள்ள 0018-வுடன் “@” symbol சேர்த்து மாணவரின் பிறந்த ஆண்டு 2005 எனில் அந்த மாணவரின் Password 0018@2005 ஆகும். 

7. மாணவரின் EMIS ID, பிறந்த தேதி இவை அனைத்தும் பள்ளிக் கல்வித் துறை வழங்கிய மாணவரின் திறன் அடையாள அட்டையில் உள்ளது. அதனைப் பயன்படுத்திக் கொள்ளவும்.

8. EMIS இணையதளத்தில்  Student Menu வில் உள்ள Students list option ஐப் பயன்படுத்தி அனைத்து மாணவர்களின் EMIS ID-களையும் printout எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

9. மாணவர்கள் தேர்வு எடுக்கும் போது ஏதேனும் இடையூரினால் தேர்வு தடைபட்டால் மீண்டும் தேர்வை முதலிலிருந்து எடுக்க வேண்டும்.

10. தேர்வை முடித்து Complete Test கிளிக் செய்தவுடன் தானாக logout ஆகிவிடும்.


No comments