Breaking News

ஜெயலலிதா பிறந்த நாளான பிப்.,24 இந்த தினமாக கடைபிடிக்கப்படும் -முதல்வர் இ.பி.எஸ்

   ஜெயலலிதா பிறந்த நாளான பிப்.,24, மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கடைபிடிக்கப்படும் என முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் 110வது விதியின் கீழ் முதல்வர் இ.பி.எஸ்., வெளியிட்ட அறிவிப்புகள்:

* ஜெயலலிதா பிறந்த நாளான பிப்.,24 அன்று மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கொண்டாடப்படும்.

* ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு 21 வயதாகும் போது ரூ.2 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும்.

* பெற்றோர் இல்லாத பெண் குழந்தைகளுக்கு சமூக பொருளாதார நிலையை கருதி சிறப்பு பரிசு தொகுப்பு.

* பாலின விகிதங்களை சரிசமமாக கொண்டு வர முயற்சி மேற்கொள்ளும் மாவட்டங்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும்.

* ஹஜ் பயணிகளுக்கு சென்னையில் ரூ15 கோடியில் தங்கும் விடுதி அமைக்கப்படும்.

* உலமாக்களின் ஓய்வூதியம் ரூ.1,500 ல் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்படும்.


No comments