Breaking News

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக விரிவுரையாளர் பணிக்கு, 2,311 பேரை தேர்வுசெய்ய நடவடிக்கை

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக விரிவுரையாளர் பணிக்கு, 2,311 பேரை தேர்வுசெய்ய நடவடிக்கை


''அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் பணிபுரியும், கவுரவ விரிவுரையாளர்களை, பணி நிரந்தரம் செய்யும் திட்டம், அரசின் பரிசீலனையில் உள்ளது,'' என, உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:

அ.தி.மு.க., - ராமச்சந்திரன்: அரியலுார் மாவட்டம், செந்துறையில் கலைக் கல்லுாரி துவக்க, அரசு ஆவன செய்யுமா?

அமைச்சர் அன்பழகன்: கருத்துரு எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை.



ராமச்சந்திரன்: செந்துறை தாலுகா, கிராமங்களை உள்ளடக்கிய பகுதி. கடந்த முறை, பெரம்பலுார் மாவட்டத்தில், தி.மு.க., - எம்.எல்.ஏ., தொகுதிக்கு, கட்சி பாகுபாடு பார்க்காமல், கல்லுாரி வழங்கினார் ஜெயலலிதா. அங்கு தாலுகாவிற்கு, ஒரு கல்லுாரி உள்ளது. நான் உங்கள் வீட்டு பிள்ளை; எனவே, செந்துறை தாலுகாவிற்கு, ஒரு கல்லுாரி வழங்க வேண்டும்.அமைச்சர் அன்பழகன்: ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும்.

தி.மு.க., - வேலு: அரசு கலைக் கல்லுாரிகளில், கவுரவ விரிவுரையாளர்களாக பணிபுரிவோருக்கு, மாதம், 15 ஆயிரம் ரூபாய் தான் சம்பளம் வழங்கப்படுகிறது. மற்ற மாநிலங்களில், 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. எனவே,ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

அமைச்சர் அன்பழகன்: கல்லுாரி விரிவுரையாளர் பணிக்கு, 2,311 பேரை, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் தேர்ந்தெடுக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கவுரவ விரிவுரையாளர்களை, பணி நிரந்தரம் செய்யும் திட்டம், அரசின் பரிசீலனையில் உள்ளது.இவ்வாறு, விவாதம் நடந்தது.



No comments