Breaking News

2600 உபரி பட்டதாரி ஆசிரியர்களை தொடக்கப்பள்ளிகளில் பணியிறக்கம் செய்ய நடவடிக்கை

       அரசு தொடக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு உபரி பட்டதாரி ஆசிரியர்களை பணியிறக்கம் செய்ய கல்வித் துறை முடிவு செய்துள்ளது . தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 37 , 211 அரசுப் பள்ளிகள் இயங்குகின்றன . இதில் 46 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர் . இவர் களுக்கு பாடம் நடத்த 2 . 3 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர் . இதற்கிடையே அனைத்துவகை ஆசிரியர்களுக் கான பணிநிரவல் , பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் கலந்தாய்வு கடந்த ஜுலை மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்தப்பட்டது . தற்போது கலந்தாய்வு முடிவில் தொடக்கக் கல்வித் துறையில் 2 , 600 வரையான இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன . இவற்றை உபரி பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு சமன் செய்ய கல்வித் துறை முடிவு செய்துள்ளது .

      இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது : அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவு உட்பட பல்வேறு காரணங்களால் உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வரு கிறது . அதன்படி 2018 - ம் ஆண்டு ஆகஸ்ட் மாத மாணவர் சேர்க்கை யின்படி பள்ளிக்கல்வித் துறையில் 13 , 623 பட்டதாரி ஆசிரியர்கள் உபரியாக இருந்தனர் . இவற்றில் ஜுலையில் நடைபெற்ற பணி நிரவல் கலந்தாய்வு மூலம் 1 , 514 ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்கப்பட்டது . இன்னும் 12 , 109 பட்டதாரி ஆசிரியர்கள் உபரியாக இருக் கின்றனர் . 1996 முதல் 2014 - ம் ஆண்டு வரையான காலத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களில் உபரியானவர்களின் விவரப் பட்டியலை தமிழ் , ஆங்கிலம் , கணிதம் , அறிவியல் , சமூக அறிவியல் என பாடவாரியாக தயாரித்துள்ளோம் . உபரி பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணிகள் வழங்க ஏற்கனவே தமிழக அரசு முடிவு செய்திருந்தது . அதன் படி தொடக்கப் பள்ளிகளில் உள்ள 2 , 600 வரையான காலி பணியிடங்களுக்கு உபரி ஆசிரி யர்களை பணியிறக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது . இதற்காக மாவட்ட வாரியாக தற்போது பட்டியல் தயாரிக் கும் பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகின்றன . குறைவான பணிக்காலத்தை கொண்ட ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளித்து தேர்வு செய்யப்படுகின்ற னர் . அதிக தூரத்துக்கு பணி மாறுதல் வழங்குவதைத் தவிர்க்க முடிவு செய்துள்ளோம் . முடிந்த வரை தற்போது பணிபுரியும் மாவட்டத்துக்குள்ளோ அல்லது அருகில் உள்ள மாவட்டங்க ளுக்கோ ஆசிரியர்கள் மாறுதல் செய்யப்படுவார்கள் . முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் மாவட்ட அளவில் படிப்படியாக இந்த பணிகள் மேற்கொள்ளப்படும் . பணியிறக்கப்படும் ஆசிரியர் கள் 4 , 5 - ம் வகுப்புகளுக்கு மட்டும் பாடம் நடத்த அனுமதிக்கப்படுவர் . அவர்களின் ஊதியம் உட்பட பணிநிலையில் எந்த மாற்றமும் இருக்காது . மீதமுள்ளவர்களை குறைவான ஆசிரியர் உள்ள பள்ளி களுக்கு சிறப்பு பணியில் அனுப்பு தல் , துறை அலுவல் வேலை களுக்கு பயன்படுத்துதல் போன்ற மாற்றுப்பணிகள் வழங்க பரிசீ லனை செய்யப்பட்டு வருகிறது .




No comments