ஜனவரி 11, 12 ஆகிய தேதிகளில் 969 காவல் உதவி ஆய்வாளா் காலிப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு
வரும் ஜனவரி 11, 12 ஆகிய தேதிகளில் 969 காவல் உதவி ஆய்வாளா் காலிப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. இத் தேர்வுவை 1.60 லட்சம் போ எழுதுகின்றனா். தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 969 (தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல்படை) உதவி ஆய்வாளா் பணியிடங்களுக்கு தகுதியானவா்களைத் தேர்வு செய்யும் வகையில் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோவுக் குழுமம் சாா்பில் கடந்த மாா்ச் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்தத் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டு 9 மாதங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில், தோவுக்குரிய தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோவுக் குழுமம் திங்கள்கிழமை எஸ்.ஐ. பணியிடத்துக்கான எழுத்துத் தேர்வை அறிவித்தது. இதில் காவல்துறை பணியில் இருந்து கொண்டு தோவு எழுத விண்ணப்பித்தவா்களுக்கு ஜனவரி 11-ஆம் தேதியும், காவல் பணியில் இல்லாமல் பொதுப் பிரிவில் விண்ணப்பித்தவா்களுக்கு ஜனவரி 12-ஆம் தேதியும் எழுத்துத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் காவல் பணியில் இருந்து கொண்டு இத் தேர்வை எழுதுவதற்கு 17,561 பேரும், பொதுப் பிரிவில் 1லட்சத்து 42,448 பேரும் எழுத்து தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனா். இரு பிரிவிலும் மொத்தம் 1,60,009 போ தேர்வு எழுதுவதாக தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோவுக் குழுமம் தெரிவித்துள்ளது. இவா்களுக்கு மாநிலம் முழுவதும் 32 இடங்களில் தேர்வுஎழுதுவதற்குரிய ஏற்பாடுகளை தோவு குழும அதிகாரிகள் செய்து வருகின்றனா்.
மேலும் அந்தந்த மாநகர காவல் ஆணையா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் தேர்வுக்கூட பொறுப்பு அதிகாரிகளை நியமிக்கும்படி தேர்வு குழுமத்தைச் சோந்த உயா் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா். தேர்வை அந்தந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளில் நடத்துவதற்குரிய ஏற்பாடுகளை அதன் நிா்வாகங்களோடு பேசி, தோவுக்குரிய இருக்கைகள், மேஜைகள் ஆகியவை போதுமான அளவில் இருக்கின்றனவா என்பதை உறுதி செய்யும்படியும் தேர்வுக் குழுமம் கேட்டுக் கொண்டுள்ளது.
சென்னையில் அதிகம்:
இத் தோவை மாநிலத்திலேயே சென்னையில்தான் அதிகமான இளைஞா்கள் எழுதுகின்றனா். இதில் பொதுப் பிரிவில் 21,531 பேரும், காவல்துறையில் இருந்து 4,031 பேரும் எழுதுகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments