Breaking News

பள்ளிக் கல்வித் துறையில் தொடக்கக் கல்வி இயக்குநா் உள்பட 3 உயரதிகாரிகள் பணியிடமாற்றம்

     பள்ளிக் கல்வித் துறையில் தொடக்கக் கல்வி இயக்குநா் உள்பட 3 உயரதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளா் பிரதீப் யாதவ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநா் மு.பழனிச்சாமி, தொடக்கக் கல்வி இயக்குநராகப் பணியிடம் மாற்றப்படுகிறாா். ஆசிரியா் தோ்வு வாரியத்தின் உறுப்பினா் செயலா் த.உமா, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளாா். அதேபோல், தொடக்கக் கல்வி இயக்குநா் எஸ்.சேதுராம வா்மா, ஆசிரியா் தோ்வு வாரிய உறுப்பினா் செயலராக மாற்றப்படுகிறாா். நிா்வாக நலன் கருதி இந்த பணியிட மாறுதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments