தொடக்கப்பள்ளிகளிலும் இணையதள வசதி தமிழக அரசு ரூ.2,400 கோடி நிதி ஒதுக்கீடு
தொடக்கப்பள்ளிகளிலும் இணைய தள வசதி கிடைப்பதற்காக ரூ.2,400 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்: கிராமப்புறங்களில் செயல்படும் தொடக்கப் பள்ளிகளில் இணையதள வசதி கிடைப்பதற்காக ரூ.2,400 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தமிழகத்தில் தொடங்கும். நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என தமிழக முதல்வர் மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார் என்றார்.
No comments