Breaking News

இனி அரசு பள்ளிகளிலும் Smart Class அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

      பள்ளிகளில் இனி கரும்பலகைகளுக்கு பதிலாக ஸ்மார்ட் போர்டு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். அடுத்தவாரம் இறுதிக்குள் அனைத்து அரசு பள்ளிகளில் உள்ள 9, 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு இன்டர்நெட் வசதி செய்து தரப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். காந்தி கண்ட கனவை நிறைவேற்றும் மாநிலமாக தமிழகம் செயல்பட்டு வருகிறது என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே ஒரு சில பள்ளிகளுக்கு ஸ்மார்ட் போர்டுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


No comments