NTA NET தேர்வுக்கான காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது
UGC NET 2019: டிசம்பர் மாதம் நடைபெறும் NTA NET Exam 2019 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. வரும் 2019 டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்றே (அக்.9) கடைசி நாளாக இருந்தது. இந்நிலையில், தற்போது NET தேர்வு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் அக்டோபர் 15 ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகம், கல்லூரிகளில் உதவிப்பேராசிரியர் பணியில் சேருவதற்கும், ஆராய்ச்சி படிப்பு படிப்பவர்கள் உதவித்தொகை பெறுவதற்கும் நெட் தகுதி தேர்வில் (NET Exam) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். NTA NET தேர்வு ஒவ்வொரு ஆண்டும் இருமுறை நடத்தப்படுகிறது.
அந்தவகையில், இந்தாண்டு இரண்டாவதாக நடத்தப்படும் நெட் தேர்வு வரும் டிசம்பர் மாதம் 2, 6 ஆகிய தேதிகளில் நடத்தப்படுவதாக NTA அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு ugcnet.nta.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 9ம் தேதி முதல் விண்ணப்பங்கள் பதிவு தொடங்கப்பட்டது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நேற்று அக்டோபர் 9ம் தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று முடிவடைதாக இருந்த NET தேர்வு விண்ணப்பதிவு, அக்டோபர் 15ம் தேதி வரையில் நீட்டிப்பு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறியவர்கள் அக்டோபர் 15ம் தேதி வரையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். காலஅவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டதற்கான தகவல் https://ugcnet.nta.nic.in இணையளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments