Breaking News

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு எப்போது

    தமிழகத்தில்‌ ஆசிரியர்‌ பொதுமாறுதல்‌ கலந்தாய்வு முடங்கியது.  தமிழகத்தில்‌ நடப்பாண்டில்‌ ஆசிரியர்‌ பொது மாறுதல்‌ கலந்தாய்வு அடுத்தடுத்து முடங்கி வருவது ஆசிரியர்களை அதிருப்தியடைய  செய்துள்ளது. தேர்தல்‌ ஆணையத்திடம்‌ அனுமதி பெற்று கலந்தாய்வை நடத்த வேண்டும்‌ என்று கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில்‌ பள்ளிகள்‌ திறந்து காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறையும்‌ விடப்பட்டுவிட்டது. வரும்‌ அக்டோபர்‌ 3ம்‌ தேதி பள்ளிகள்‌ மீண்‌டும்‌ திறக்கப்பட உள்ளது. முதுகலை ஆசிரியர்‌ பணியிடங்‌கள்‌ மாவட்டத்திற்கு 60க்கும்‌ மேல்‌ வீதம்‌ காலியாக உள்ளதால்‌ மாணவ மாணவியர்‌ கடும்‌ அவதிப்பட்டு வருகின்றனர். 11ம்‌, 12ம்‌ வகுப்பு படிக்கும்‌ மாணவ மாணவியருக்கு பல பிரிவுகளுக்கு முறையாக பாடம்‌ நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இது  மாணவ மாணவியர்‌, பெற்றோர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. தமிழகம்‌ முழுவதும்‌ 2144 முதுகலை பட்டதாரி அசிரியர்‌ பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தால்‌ தற்போது நடத்தப்பட்டு வருகிறது.

     ஆனால்‌ இந்த காலியிடங்களை தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நிரப்பிக்கொள்ள அரசு உத்தரவிட்‌டது. இருப்பினும்‌ பல பள்ளிகளில்‌ ஆசிரியர்கள்‌ பணியிடங்கள்‌ காலியாக இருந்து வருகிறது. கோடை விடுமுறை காலத்தில்‌ நடத்தி முடிக்கப்பட வேண்டிய ஆசிரியர்‌ பொதுமாறுதல்‌ கலந்தாய்வு பின்னர்‌ மக்களவை தேர்தல்‌ காரணமாக தள்ளிப்போனது. மீண்டும்‌ ஆசிரியர்‌ இடமாறுதல்‌ கலந்தாய்வுக்கான தேதி அறிவிக்‌கப்பட்டு கலந்தாய்வு தொடங்கிய நிலையில்‌ வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல்‌ தேதி அறிவிக்கப்பட்டது. இதனால்‌ கலந்‌தாய்வு மீண்டும்‌ முடங்கியது.

      இந்தநிலையில்‌ பள்ளிக்‌கல்வி துறை மூலம்‌ நடைபெறவிருந்த ஆசிரியர்‌ பொதுமாறுதல் கலந்தாய்வு நீதிமன்ற உத்தரவால்‌ நிறுத்தி வைக்கப்‌பட்டது. பட்டதாரி ஆசிரியர்‌ மற்றும்‌ இடைநிலை ஆசிரியர்‌ பணிநிரவல்‌ கலந்தாய்வு நடைபெற்றபோது அதிக அளவில்‌ குளறுபடிகள்‌ நடந்ததால்‌ இடைநிலை ஆசிரியர்‌ பணி நியமனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும்‌ பள்ளிக்கல்வித்துறையால் நிறுத்தி வைக்கப்பட்ட பொதுமாறுதல்‌ கலந்தாய்வு காலாண்டு விடுமுறையில்‌ நடத்தப்படும்‌ என அறிவிக்‌கப்பட்டது. நீதிமன்ற உத்தரவால்‌ மூன்‌றாண்டு பணிபுரிந்திருக்க வேண்டும்‌ என்ற நிபந்தனை தளர்த்தப்பட்டு ஓராண்டு காலம்‌ பணிபுரிந்தால்‌ போதும்‌ எனவும்‌ தெரிவிக்‌கப்‌ பட்டது. ஆனால்‌ இது தொடர்பான உத்தரவு ஏதும்‌ இதுவரை முறைப்படி வெளியிடப்படவில்லை. இந்நிலையில்‌ விக்கிரவாண்டி மற்றும்‌ நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்‌தல்‌ அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல்‌ நடத்தை விதி அமலில்‌ வந்துள்ளது. இதனால்‌ ஆசிரியர்‌ பொது மாறுதல்‌ கலந்தாய்வு மீண்டும்‌ முடங்கியுள்ளது. இதனால்‌ தேர்தல்‌ ஆணையத்திடம்‌ அனுமத பெற்று மாணவர்களின்‌ நலன்‌ கருதி விரைவில்‌ ஆசிரியர்‌ பொது மாறுதல்‌ கலந்தாய்வு மற்றும்‌ பதவி உயர்வு கலந்தாய்வு நடத்‌திட தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ என்று ஆசிரியர்கள்‌ மத்தியில்‌ கோரிக்கை எழுந்துள்ளது.



No comments