Breaking News

பேராசிரியர் பணியில் சேர்வதற்கான அனுபவ சான்றிதழ் வழங்க வசூல் வேட்டை

   அரசு கல்லுாரிகளில், பேராசிரியர் பணியில் சேர்வதற்கான அனுபவ சான்றிதழ் பெறுவதற்கு, ஆயிரக்கணக்கில் பணம் வாசிலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் மற்றும் கல்வியியல் கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணியில், 2,331 காலியிடங்கள் உள்ளன. இதற்கு  விண்ணப்பிக்க 30ம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு, கல்வி தகுதி மற்றும் பணி அனுபவத்துக்கு, என தனித்தனியாக மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. இதற்காக, பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள், தாங்கள் பணியாற்றும் மற்றும் பணியாற்றிய கல்லுாரிகளில், அனுபவ சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்து வருகின்றனர். இந்த சான்றிதழ் தருவதற்கு, கல்லுாரிகள் வசூல் வேட்டையில் இறங்கியுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.இதைத் தடுக்க, உயர் கல்வி துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


No comments