Breaking News

கெளரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம்‌ செய்வது குறித்து தீவிர பரிசீலனை

     அரசு கலை-அறிவியல்‌ கல்லூரிகளில்‌ பணியாற்றி வரும்‌ கெளரவ விரிவுரையாளர்களை, பணி நிரந்தரம்‌ செய்‌வது குறித்து அரசு தீவிரமாகப்‌ பரிசீலித்து வருவதாக உயர்கல்‌வித்‌ துறைச்‌ செயலர்‌ மங்கத்‌ ராம்‌ ஷர்மா கூறினார்‌. சென்னையில்‌ தமிழக அரசின்‌ சார்பில்‌ ஏற்பாடு செய்யப்பட்‌டிருந்த மத்திய அரசின்‌ அனைவருக்கும்‌ உயர்கல்வித்‌ திட்டம்‌ குறித்த கருத்தரங்கில்‌ பங்‌கேற்ற அவர்‌ இதுகுறித்து அளித்த பேட்டி: அரசு கலை-அறிவியல்‌ கல்லூரிகளில்‌ பணியாற்றி வரும்‌ கெளரவ விரிவுரையாளர்களின்‌ நிலையை உயர்த்த இரண்டு விதமாக தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. அதாவது, அவர்களுக்கு ஏற்கெனவே ,10,000 மாத ஊதியம்‌ வழங்கப்பட்டது. இப்போது ரூ. 15000 ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. இதை மேலும்‌ உயர்த்தி ரூ. 25,000 ஆக வழங்கவேண்டும்‌ என கோரிக்கை விடுத்துள்ளனர்‌. இதுகுறித்து அரசு பரிசீலித்து வருகிறது. ஆனால்‌, அதே நேரம்‌, அவர்களை பணிநிரந்தரம்‌ செய்வது குறித்தும்‌ அரசு தீவிரமாகப்‌ பரிசீலித்து வருகிறது என்றார்‌ அவர்‌.


No comments