தேசிய மக்கள் தொகைக் கல்வி- பள்ளிகளில் போஸ்டர் தயாரித்தல் போட்டி
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், புதுடெல்லியிலுள்ள தேசிய ஆசிரியார்கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் (அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி, மாநகராட்சிப் பள்ளிகள் நீங்கலாக) 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு போஸ்டர் தயாரித்தல் போட்டியினை மக்கள்தொகைக் கல்வித் திட்டத்தின் கீழ் நடத்தத் திட்டமிட்டுள்ளது. இப்போட்டியினைச் செவ்வனே நடத்த, மாவட்ட ஆசிரியா்கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள், போட்டி நடத்துதல் சார்ந்து சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் ஆகியோருடன் விரிவாகக் கலந்துரையாடி, தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
No comments