Breaking News

14 ஆண்டுகளாக உள்ள NCERT பாடத்திட்டத்தை மாற்ற முடிவு

     புதிய கல்விக் கொள்கையின் படி 14 ஆண்டுகளாக உள்ள  பள்ளிபாடத் திட்டங்களை மாற்ற, என்.சி.இ.ஆர்.டி., முடிவெடுத்துள்ளது. தேசிய அளவில், பள்ளி மாணவர்களுக்கான பாடத் திட்டங்களை, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் தயாரித்து வழங்கி வருகிறது. தேசிய அளவில், பள்ளி பாடத் திட்டங்களை, 1975, 1988, 2000, 2005 ஆகிய ஆண்டுகளில், என்.சி.இ.ஆர்.டி., மாற்றியமைத்தது. கடந்த, 14 ஆண்டுகளாக அமலில் உள்ள, பள்ளி பாடத் திட்டத்தை, புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, இம்மாத இறுதியில், ஆய்வு கமிட்டி அறிவிக்கப்படும். ஆய்வு கமிட்டிபுதிய கல்விக் கொள்கை இறுதி செய்யப்பட்டவுடன். ஆய்வு கமிட்டி, தேசிய அளவில் பள்ளி பாடத் திட்டங்களில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் பற்றி, ஆய்வு செய்து புதிய பாட திட்டங்களை உருவாக்கும்.


No comments