112.133.214.70 என்ற இணையதள முகவரியில் தட்டச்சு தேர்வு முடிவுகளை காணலாம்
தட்டச்சு சுருக்கெழுத்து உள்ளிட்ட அரசு தொழில்நுட்ப வணிகவியல் பாட தேர்வு முடிவு 30-ந் தேதி வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்டு மாதத்தில் நடைபெற்ற அரசு தொழில்நுட்ப வணிகவியல் பாடத்தேர்வுகளான தட்டச்சு (ஆங்கிலம் மற்றும் தமிழ்) சுருக்கெழுத்து (ஆங்கிலம் மற்றும் தமிழ்) மற்றும் கணக்கியல் ஆகிய தேர்வுகளின் முடிவுகள் காலை 10 மணிக்கு சென்னை தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் வெளியிடப்படும். பயிலகம் மற்றும் தனித்தேர்வர்கள் தேர்வு முடிவுகளை இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேற்கண்ட தகவலை தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் தேர்வு வாரிய தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments