Breaking News

அரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வு அக்டோபர் 1 முதல் விண்ணப்பிக்கலாம்

        தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் துறைத்தேர்வுகள் டிசம்பர் 2019 ல் நடைபெற இருக்கிறது. டிசம்பர் 2019 ஆம் ஆண்டிற்கான துறைத் தேர்வுகள் 22.12.2019 முதல் 30.12.2019 வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை உட்பட (25.12.2019 - கிறிஸ்துமஸ் விடுமுறை நீங்கலாக) தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் விண்ணப்பங்களை 01.10.2019 முதல் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள் 30.10.2019 அன்று 11.59 பிற்பகல் வரை விண்ணப்பிக்கலாம் என செய்தித்தாளில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.


No comments