பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுமா - ஆசிரியர்கள் ஏக்கம்
தமிழக அரசு பள்ளிக்கல்வி துறையின் ஏராளமான பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் பிற ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும் 4000க்கும் அதிகமான முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ள நிலையில் கடந்த ஜூன் 11ம் தேதி முதல் ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் வேலூர் நாடாளுமன்ற இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அதுவும் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் காலாண்டு விடுமுறையில் ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடக்கும் என எதிர்பார்ப்பில் ஆசிரியர்கள் இருந்தனர். ஆனால் அதற்கான அறிகுறியே இல்லை. இந்நிலையில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதி மீண்டும் அமலில் இருந்தாலும் தேர்தல் ஆணையத்திடம் முன் அனுமதி பெற்று ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
No comments