Breaking News

அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதற்கான அறிகுறிகள்

            உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்காக, வாக்காளர் பட்டியலை இறுதி செய்வதற்கான அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுபற்றி அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை செப்டம்பர் 30ம் தேதிக்குள்ளாக பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அக்டோபர் 1ம் தேதிக்குள் வாக்காளர் பட்டியலை அச்சு பணிக்கு கொடுக்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது. அக்டோபர் 3ம் தேதிக்குள் வாக்காளர் பட்டியலின் அச்சு பணிகளை முடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அக்டோபர் 4ம் தேதி புதிய வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் எனவும் மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

          மேலும், அக்டோபர் 5ம் தேதிக்குள் அரசியல் கட்சிகளுக்கு வாக்களர் பட்டியலை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் சமர்ப்பித்துவிட்டதாக கூறினார். இவாக்குச்சீட்டுகளை அச்சடிக்கத் தேவைப்படும் காகிதங்களுக்கான டெண்டரும் விடப்பட்டிருந்தது. இதனால் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன.


No comments