Breaking News

பணிபுரியும் மகளிருக்கான அம்மா ஸ்கூட்டர் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்

      முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் பணிபுரியும் மகளிருக்கான இருசக்கர வாகன மானிய திட்டத்தில், அம்மா ஸ்கூட்டர் பெற, இன்று முதல் சென்னை மாநகராட்சியை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என  தெரிவித்துள்ளது. தமிழகத்தில், 18 முதல், 40 வயது வரை உள்ள பணிபுரியம் மகளிர், இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றுள்ள, தனிநபரின் ஆண்டு வருமானம், 2.50 லட்சம் ரூபாய்க்கு குறைவாக உள்ள மகளிருக்கான, 'அம்மா' இருசக்கர வாகன திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், பயன்பெறுவோர், புதிதாக வாங்கும் மகளிருக்கான இருசக்கர வாகனத்தின் விலையில், 50 சதவீதம் அல்லது ரூ.25,000, இதில் எந்த தொகை  குறைவோ அந்த தொகை அவர்களுக்கு வழங்கப்படும். மாற்றுத் திறனாளி பயனாளிக்கு, 50 சதவீதம் அல்லது ரூ.31,250, இதில், எது குறைவோ, அந்த தொகை வழங்கப்படும். வாகனம், வங்கிக் கடன் வாயிலாக வாங்கப்பட்டால் மானியத் தொகை பயனாளிகளின் வாகனக் கடன் கணக்கிற்கு நேரடியாக வங்கி வாயிலாக கொடுக்கப்படும் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


No comments