Breaking News

பள்ளிக்கல்வி இயக்குனர்களை இடமாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - பணியிட மாறுதல் ஆணை வெளியிடப்படுகிறது. அரசாணை எண் : 201 தேதி : 19.09.2019 , படி பள்ளிக்கல்வி இயக்குனர்கள் 3 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனராக இருக்கும் ராமேஸ்வர முருகன், முறைசாரா கல்வி இயக்குனராகவும் முறைசாரா கல்வி இயக்குனர் சேதுராம வர்மா, தொடக்க கல்வித்துறை இயக்குனராகவும் மற்றும் தொடக்க கல்வித்துறை இயக்குனர் கருப்பசாமி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனராக அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.



No comments