ஆசிரியர்களுக்கு அடி மேல் அடி
அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் இனி கிராமங்களுக்கு சென்று அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தின் கீழ், அங்குள்ள கிராமத்து இளைஞர்களுக்கு விளையாட்டு பயிற்சி அளிக்க வேண்டும் மற்றும் இதற்காக அவர்கள் ஊராட்சியில் உள்ள புறம்போக்கு இடங்களை அறிந்து புதிய விளையாட்டு மைதானங்கள் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது உடற்கல்வி ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே உடற்கல்வி ஆசிரியர்கள் பல பள்ளிகளில் இல்லாத நிலையில், இவர்கள் கிராமத்தில் உள்ளவர்களுக்கு பயிற்சிக்கு சென்றால், அரசு பள்ளி மாணவர்களுக்கு யார் விளையாட்டு பயிற்சி அளிப்பது என்பது கேள்விக்குறியாக உள்ளது.
No comments