Breaking News

2019-2020 ம் ஆண்டிற்கான தேசிய திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்

2019-2020ம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள், 2019 நவம்பர் மாதம் 3-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள தேசிய திறனாய்வுத் தேர்விற்கு (NTSE) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.

விண்ணப்பங்களை http://www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 22.08.2019 முதல் 07.09.2019 வரை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50/- சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 07.09.2019. மேலும் காலஅவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது என அரசு தேர்வுகள் இயக்ககம் வலைதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி என்பதை கீழ்க்காணும் லிங்கை கிளிக் செய்வதன் மூலம் பார்க்கலாம்  Click here


No comments