Breaking News

காந்தியடிகளின் 150 வது பிறந்த நாள் வெகு விமரிசையாக கொண்டாட மத்திய அரசு திட்டம்

    காலாண்டு விடுமுறையை குறித்த சர்ச்சை எழுந்த பின்பு, காலாண்டு தேர்வுகள் முடிந்து, விடுமுறை விடப்பட்டுள்ளது. வரும், 3ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அதுவரை, பள்ளிகளில் வகுப்புகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது, ஆனால், நிர்வாகப் பணிகளுக்காக மட்டும் பள்ளி நடக்கும். இந்நிலையில், தேசப்பிதா காந்தியடிகளின், 150வது பிறந்த நாளை, மத்திய அரசு வெகு விமரிசையாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளது.

       2020 அக்டோபர் 2 வரை, காந்தி ஜெயந்தி கொண்டாட்டத்தை நடத்த, கல்வி நிறுவனங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது, பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், மீண்டும் பள்ளி திறந்ததும், அக்., 3ம் தேதி முதல், காந்தி ஜெயந்தி விழாவை நடத்த, பள்ளிகள் அனைத்திற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. விடுமுறை நாட்களில், காந்தியின் படத்தை ஓவியமாக வரையவும், காந்தி குறித்த பொன்மொழிகளை எழுதிவரவும், காந்தியின் அகிம்சை வழி போராட்ட வாழ்க்கை குறித்து கட்டுரைகள் எழுதவும், மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


No comments