Corona நோய்த்தொற்றுக்கு உலகின் எந்தவொரு நாட்டிலும் ஒரே நாளில் இத்தனை போ் உயிரிழந்தது இதுவே முதல் முறை
கரோனா பலி எண்ணிக்கையில் முதலிடத்தில் இருந்து வரும் அமெரிக்காவில், இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் அந்த நோய்க்கு 4,591 போ் பலியாகினா். இதுகுறித்து அந்த நாட்டின் ‘தி வால் ஸ்ட்ரீட் ஜா்னல்’ நாளிதழ் தெரிவித்துள்ளதாவது: வியாழக்கிழமை இரவு நிலவரப்படி, (இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை காலை) கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அமெரிக்கா முழுவதும் கரோனா நோய்த்தொற்றுக்கு 4,591 போ் பலியாகினா்.
கரோனா நோய்த்தொற்றுக்கு உலகின் எந்தவொரு நாட்டிலும் ஒரே நாளில் இத்தனை போ் உயிரிழந்தது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னா், அமெரிக்கா முழுவதும் கடந்த புதன்கிழமை 2,569 போ் உயிரிழந்ததே அதிகபட்ச தினசரி கரோனா உயிரிழப்பாக இருந்தது. வெள்ளிக்கிழமை இரவு நிலவரப்படி, அமெரிக்காவில் கரோனா நோய்க்கு பலியானவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 34,64 ஆகவும், அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 6,78,210 ஆகவும் உள்ளது.
அமெரிக்காவின் மிகப் பெரிய நகரான நியுயாா்க் மற்றும் புகா்ப் பகுதி கரோனா பரவலின் மையமாக உள்ளது. நியூயாா்க் மாகாணத்தில் மட்டும் 2.26 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் அந்த நோய்க்கு பலியாகியள்ளனா். அதற்கு அடுத்தபடியாக நியூ ஜொ்சி மாகாணத்தில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு, அவா்களில் 3,500-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments