Breaking News

மாணவர்கள் வீட்டில் இருந்தே பாடங்களை படிக்க பள்ளிக்கல்வித்துறை சிறப்பு ஏற்பாடு

     கொரோனா பாதிப்பு காரணமாக மாணவர்கள் தொடர் விடுமுறையில் வீட்டில் இருக்கின்றனர். சில தனியார் பள்ளிகள் தங்களது மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலமாகவும், ஜூம் செயலி மூலமாகவும் பாடங்களை நடத்தியும், பாடம் தொடர்பான தொடர் பணிகளையும் கொடுத்து வருகிறது. இதில் வீட்டில் இருந்தபடியே மாணவர்கள் தங்களது கற்றல் திறனை மேம்படுத்திக் கொள்கின்றனர்.

    ஆனால் பல மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை, குறிப்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கு இது எட்டா கனியாக உள்ளது. இதை போக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறையானது மாணவர்கள் வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலமாக கல்வி கற்க சிறப்பு இணையதம் ஒன்றை தயார் செய்துள்ளது. e-learn.tnschools.gov.in என்ற இணையதளம் மூலமாக மாணவர்கள் அடுத்து வரஉள்ள கல்வியாண்டுக்கான பாடங்களையும் , 10ஆம் வகுப்பு மாாாணவர்கள் வரவுள்ள பொதுத்தேர்வுக்கும் கற்றுக்கொள்ளலாம்.


No comments