தமிழகத்தில் புதிதாக இன்று 74 பேருக்கு கரோனா உறுதி - தமிழக சுகாதாரத் துறை செயலாளர்
தமிழகத்தில் புதிதாக இன்று (சனிக்கிழமை) 74 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
'தமிழகத்தில் புதிதாக 74 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 73 பேர் தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். ஒருவர் வெளிநாட்டு நபருடன் தொடர்பில் இருந்தவர். இதன்மூலம் தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 485 ஆக உள்ளது.
இதில், 422 பேர் தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் மற்றும் பங்கேற்றவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்.' தமிழகத்தில் பாதித்தோரின் எண்ணிக்கை: 485 தமிழகத்தில் பலியானோரின் எண்ணிக்கை: 3 தமிழகத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை: 7
No comments